கவிதை கேட்கும் வசதி

வாழ்த்துக் கவி கேட்க விரும்புபவர்களுக்கு கவிதை தரப்படும். மோருக்குப் பாடிய ஔவைபோல் இந்த ஊருக்கு பாடித்தர சிறு சன்மானம்.

பிறந்த நாள் வாழ்த்து, திருமண வாழ்த்து

இன்னும் பல







Paypal ஊடாக கொடுப்பனவு

தங்கள் விபரங்களை கவிதை தேவைப்படும் சந்தர்ப்பத்தை vajuguru@gmail.com என்ற முகவரிக்கு அறியத்தரவும். இரு வாரங்களுக்குள் கவிதை தங்களுக்கு மின்னஞ்சல் செய்யப்படும். தாங்கள் செய்த சன்மானத்தின் ஸ்கிறின் சொட் பிரதியை இணைக்க மறவாதீர்கள்.



வியாழன், பிப்ரவரி 25, 2010

தேவதையின் வரம்!

சுட்ட பற்றிஸ் விற்கும் தேநீர் சாலை- அதை
சுற்றும்போது கண்டன் என்ரை ஆளை!
மொட்டையாக பார்த்த பார்வை நெஞ்சை
மொத்திப் போக வைச்சாஅந்த வஞ்சை!

குந்தியிருந்தா அந்த வாங்கில் மூலை! அவ
குடியிருப்பு ஊரின் எந்த மூலை!?
சொந்தகாரி ஆகிவிட்டு போனா - வலையை
சுழிச்சுப்போட்டு ஓடுமொரு மீனா!

வெட்டியாக வீதிசுற்ற வைச்சா- சும்மா
விளைந்த ஒல்லித் தென்னம் பொச்சா!
கட்டி வெல்லம் தின்பம் என்ற ஆசை!
கடைசியிலை வைச்சா ஒரு பூசை!

அம்மாக்காரி சிரிச்சு மழுப்பிப் போனா
அப்பன்காரன் தேங்காய் உடைச்சார் வீணா!
மம்மல் வேளை வந்த மப்பு ஆச்சு - நானும்
மாட்டிக் கொண்டன் மானம் இப்ப போச்சு!

தேவதைகள் வரங்கொடுக்கும் என்று - மரத்தை
தினமும் வந்து பார்த்து கொண்டு நின்று!
மீதமுள்ள ஆசையெல்லாம் இன்று- உச்சி
மீதுஏறி ஆடும் என்னை கொன்று!







புதன், ஜூலை 23, 2008

சொர்க்கம்

சொர்க்கம் அவளது மடி என்று எழுதினால்,
எப்ப அதில் படுத்தீர்கள் என நீங்கள் கேட்கக் கூடும்.
ஆகவே நான் மௌனி!
சொர்க்கம் அவளது மடி என்று எழுதினால்,
எப்படியிருந்தது என நீங்கள் கேட்கக் கூடும்.
உங்களைப் போலவே நானும்
தேடிக்கொண்டிருக்கிறேன்.

முக்கிய குறிப்பு: இது கவிதை அல்ல.

வெள்ளி, ஜூன் 13, 2008

தட்டி விடுங்கள் தட்டச்சை!

கேட்பதுடன் நின்றுவிடாது எமக்கும்  ஒருவரி எழுதுங்கள். 
(நன்றி பிபிசி தமிழ் சேவை! 1995)

புதன், மார்ச் 12, 2008

எனது பக்கங்கள்

வணக்கம்
எனது மற்றைய பக்கங்களை பார்க்க நீங்கள் அருகில் இருக்கும் links சொடுக்கலாம் .
இல்லாவிட்டால் கீழ் வரும் பக்கங்களுக்கு செல்லுங்கள்.
http://vayuputhiran.blogspot.com/
http://keerthanai.blogspot.com/
http://selvarani.blogspot.com/
http://kavievari.blogspot.com/
http://vajuguru.spaces.live.com/
ttp://mfcal98.blogspot.com
http;// kaviarangu.blogspot.com

நன்றி

திங்கள், மே 22, 2006

Ya, Its me!

Hi
Welcome to my blog pages.
There are few  more in the links
Enjoy reading!