பென்ரொச் பற்றரி உட்பட அனைத்துபற்றரிகளும் பொருளாதாரத் தடையால் யாழ்ப்பாணம் வராத காலத்திலை கட்டையிட்டை ஆறு ரீசாசபிள் பென்ரோச் பற்றரிகள் என்னெண்டு வந்ததென எனக்குத் தெரியாது.ஆனாலும் அந்தபற்றியளிலை இரண்டைஎனது பாவனைக்கு அவன் தந்துதவியிருந்தான்.
பென்ரோச் பற்றிகளை சார்ஜ்பண்ணவெண்டால் ஒரு சார்ஜரும் எங்களிடம் இல்லை.சைக்கிள் டைனமோவில் இருந்து ரேடியோவுக்கு கொடுக்கும் கம்பிகளை இணைத்து சார்ஜர் சப்ளை கொடுக்கலாம். பற்றரியை இறுக்கிப் பிடிக்கும் கோல்டராக எங்களது பழைய விளையாட்டுச் சாமானிலை பற்றரி போடுற பகுதி பாவிக்கப்பட்டது. அப்பிடி வியையாட்டுச் சாமான்கள் இல்லாத வீடுகளில் வெள்ளை எஸ் லோன் பைப்பும் பூட்டூசியும் பாவிக்கப்பட்டது.
மின்சாரம் இருந்துவிட்டு மின்சாரம் இல்லாமல் போன வலியை யாழ்ப்பாணம் நன்கு அனுபவித்தது.
கலியாண வீடுகள் சாமத்திய சடங்குகள் எண்டு நடக்கேக்கை மட்டும் மின்பிறப்பாக்கிகள் பயன்படும். இந்த ஜெனரேட்டர்கள் கூட பொருளாதாரக் தடைக்கு உட்பட்டவை. பழைய தண்ணிப்பம்பியின் மிசினும் ரிவைண்ட் பண்ணப்பட்டு டைனமோக்களாக மாற்றப்பட்ட மின்சார மோட்டர்களும் இணைந்து ஒரு பலகையில் பூட்டப்பட்டு மினி ஜெனரேட்டர்களாக மாறின. ஒல்வொருவர் குடும்பத்திற்கும் கொடுக்கப்பட்ட அரை லிட்டர் மண்ணெயும்சேர்க்கப்பட்டு ஐந்துவீட்டர் மண்ணெண்ணை சேர்க்கப்பட்டது. இந்த மாதிரி ஜெனரேட்டர் இரவு முழுதும் வேலை செய்யவெண்டால் ஐந்து அல்லது ஆறு லீட்டர் மண்ணெண்ணை வேணும்.
சக்திமூலங்கள் யாவும் தடைப்பட்ட போதிலும் மக்கள் சக்தியுடனேயே இருந்தார்கள். எரிபொருள் தட்டுப்பாட்டால் வாகனஓட்டங்களும் வாகனபுகையும் இல்லாத நகரமாக யாழ்ப்பாணம் விளங்கியது.
எரிகிற மின்விளக்கு எண்டால் அவை கலியாணவீடு செத்த வீட்டில் அல்லது ஆசுப்பத்திரியை அடையாளம் காட்ட எண்டு ICRC சுற்று வட்டாரத்தில் எரியவிடும் மின்விளக்குகளாக இருந்தன. சந்தியில் ICRC வைத்த மின்விளக்குகளில் படித்ததனால் பல ஆபிரகாம் லிங்கன்களை அரசாங்கமும் ICRC யும் சேர்ந்து உருவாக்கிக் கொண்டிருந்தன.
அப்போதுஆண்டு பத்து படித்துக்கொண்டிருந்த நானும் எனது நண்பன் மோகனனும் சமுதாயத்தின் சக்தி தேவையை பூர்த்தி செய்வோம் என சபதமெடுத்து சாம்பலில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பரிசோதனைகளில் இறங்கினோம். எள் என்ன முன்னம் எண்ணையாக நிற்கும் அவன் நவாலியில் பற்றரிக் கடையில்பழுதாகி எறிந்த ஈய நெய்யரிகளைக் காண்டு வந்தான்.
அடுப்பில் அலுமினிய தட்டை வைத்து அதில்நெய்யரித் தட்டுகளை வைத்து உருக்கி ஈயம் பெறப்பட்டது.
சோதினைகள் தொடரும்....
© வாயுபுத்திரன்
07.07.2018
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக